1.
நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்
2.
ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார் – நெஞ்சமே,
3.
தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே- நெஞ்சமே,
4.
அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே- நெஞ்சமே,
5.
இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?- நெஞ்சமே,
6.
வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள் நின்று வேண்டுகிறார்.- நெஞ்சமே,
7.
தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்- நெஞ்சமே,
1.
nenjchame, kethsemanekku nee nadanththu vanththidayo?
chanjchalaththal nenjsurukith dhayangkukinrar aandavanar
2.
aaththumaththil vathai minchi, angkalayththu vadukinrar
thetrruvar ingkaruminrith thiyangkukinrar aantavanar – nenjchame,
3.
theva kopath dheessulaiyil sinththai nonththu venththuruki
aavalayth dharaiyil vazhnththu azhuthu japam seykindrare- nenjchame,
4.
appa pithave ippathram akalasseyyum sithdhamanal
ebpadiyum nin sithdhampol enakkakaddum enkinrare- nenjchame,
5.
irathdha vervaiyal thekam methdha nanainththirukkuthe
kutrram ondrum seythidadha korravarkkiv vathai eeno?- nenjchame,
6.
vanaththilirunthor thudhan vanthdhavaraib palabpaduthdhath
than chanjchalaththodu muzhanththal nindru vendukirar.- nenjchame,
7.
thangkona niththiraikondu dhan seerkal urangkivizha
aangkavar dhaniththirunththu angkalayththu vadukinrar- nenjchame,